திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நீ காற்று நான் மரம்...


படம்: நிலாவே வா
இசை: தேவா
பாடல் இயற்றியவர்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்.

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)

நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
(நீ காற்று..)

என்னவளே என்னவளே எங்கிருந்தாய்...

படம் : நினைத்தேன் வந்தாய்
இசை : தேவா
பாடியவர்கள் : அனுராதா ஸ்ரீராம், மனோ


லால்லி போப் லால்லி போப் கோரி நிற்கும் மனசே
ஜாலி டைப் பாட்டு கேட்டால் ஆடுகின்ற வயசே

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்

வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிரிவிட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்
புதையலைப் போலவந்து கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னை மூடிவிடும் பென்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
என்னைத் தூங்கவைக்கும் தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்துவிடும் கனவுகளும் நீதான்
மொகமெல்லாம் நீதான் நீதான்
முத்தங்களும் நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான்
கண்ணீரும் நீதான் நீதான்
கண்களை மூடவிட்டு ஒளிந்தவலும் நீதான்
ஒளிந்தவளை அருகில் வந்து அனைத்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

மேகமாய் வந்து போகிறேன்...


படம்   : துள்ளாத மனமும் துள்ளும்
பாடகர்: ராஜேஷ் 
இசை: SA.ராஜ்குமார்

மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே யென் அன்பே

மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
யென் அன்பே யென் அன்பே
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதாஸ்
யென் அன்பே யென் அன்பே
மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே  என் அன்பே

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்
என் காதல் நில என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் ஸ்வாசம் வரும்
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே

ஏதோ ஒரு பாட்டு என்...

படம்:- உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
பாடியவர்:- ஹரிஹரன்
 
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

(ஏதோ)

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

(ஏதோ)
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

(ஏதோ)