திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நீ காற்று நான் மரம்...


படம்: நிலாவே வா
இசை: தேவா
பாடல் இயற்றியவர்: வைரமுத்து
பாடியவர்: ஹரிஹரன்.

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)

நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
(நீ காற்று..)

12 கருத்துகள்:

  1. எனக்கு பிடித்த பாடலும் கூட... மிக பிடித்த வரிகள்..
    //நீ ஸ்வாசம் நான் தேகம்
    நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்//

    பதிலளிநீக்கு
  2. அழகிய பாடல்த் தெரிவு ......
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. என்னோட வலைத்தளம் வந்துவிட்டுப் போங்கள்
    சகோ ..அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய
    முக்கிய விடயம் காத்திருக்கு ..........

    பதிலளிநீக்கு
  4. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... கேட்டுக்கொண்டே படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் என் தீபத்திருநாள்
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ..........

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்
    வரிவடிமாகப் பார்கையில்தான்
    அதன் முழுச் சிறப்பும் தெரிகிறது
    இல்லையெனில் இசை மயக்கத்தில்
    கவிஞனின் கற்பனை தெரியாமல் போய்விடுகிறது
    அருமையான பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. நான் மிகவும் சுவைத்த பாடல்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். உங்களின் (http://thusyanthan01.blogspot.com)-இந்த தளத்தை படித்து விட்டு இங்கே வருகிறேன். இந்த தளமும் சூப்பர். வாழ்த்துக்கள்...நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?"

    பதிலளிநீக்கு
  10. Hii, This is Great Post !
    Thanks for sharing with us!!!!


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai,
    Brand makers in chennai

    பதிலளிநீக்கு
  11. Thanks for sharing What an interesting site you have i really take a good look buy cocaine online and you can also take a good look at our blog too for more information buy crack cocaine online we also recommend you to take a good look at this site too they have good content buy mdma crystals online more of the site still want you to take a closer look too as they have really good content buy crystal meth online thanks for using your time to check on the link

    பதிலளிநீக்கு